இன்று தான் பார்ததேன் .திரையரங்கில் பார்க்க வேண்டுமென்று முடிவெடுத்தால் இவ்வளவு நாள் ஆகிவிட்டது. தாம்பரத்தில் கூட்டம் அதிகம் இல்லை. நெறைய பெயர் விமர்சனம் எழுதி விட்டார்கள். கதை தமிழ்மக்களுக்கு மாறுபட்ட புலத்தில் ஆரம்பமாகிறது. அகம் பிரம்மாஸி என்பதை எவ்வளவு பேர் புரிந்து கொள்வார்கள் அத்வைதம் தைவதம் துவைதம் போன்ற பெரிய வார்த்தைகள் தமிழனுக்கு தெரியாது. எந்த கடவுள் என்றாலும் அவனுக்கு பிடித்த ஸ்டைலில் கும்பிட்டுவிட்டு போயிட்டே இருப்பான். இந்த படம் பார்க்கும் பொழுது ஸலம்டாக் மில்லினர் படம் நினைவுக்கு வந்தது. அதிலும் கொடுமையாக குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்து பிழைக்கும் கும்பல் வரும். இதிலும் அதை விட ரொம்ப கொடுமையாக மனதில் இப்படி ஒரு இடம் இருக்கிறதா எனும் எண்ணத்தை மனதில் கொண்டுவந்த பாலா பெரிய வெற்றி பெறுகிறார். ஆரியா பயம் காட்டுகிறார். உழைத்தது வீண் போகவில்லை. மனதில் பிச்சை எடுக்கும் கூட்டம் அதிகமாக பாதித்து விட்டது. நான் எப்பமும் பிச்சை போடுவதை விரும்புவதில்லை.இந்த படம் பார்த்த பிறகு பிச்சை எடுப்பவர்களுக்கு காசு போடாமல் சாப்பிட ஏதாவது வாங்கி கொடுக்கலாம் என முடிவெடுக்க வைத்து விட்டது. பூஜா நன்றாக நடித்து உள்ளார். சிறந்த நடிகை பட்டம் வாங்குவார் பொதுவாக அனைவரும் நன்றாக நடித்து உள்ளனர். அவ்வளவு கஷ்டத்தில் பிச்சைகாரர்கள் தங்களுக்குள் மகிழ்ச்சியாக இருப்பது கொஞ்சம் மனம் நிறைவாக உள்ளது. அந்த பொயவரிடமிருந்து குழந்தையை பிடிங்கி விட்டு சென்ற பின்பு ஆறுதல் சொல்ல வருபவரிடம் கடவுள் பற்றி அந்த பெரியவர் சொல்லும் வசனம் ஜெயமோகன் சூப்பர். . கட்டாயம் இந்த படம் சிறந்த படம் பட்டம் வாங்கும். ஆனால் அந்த கடைசி காட்சி என்னை அறியாமல் பாலா மீது பெரிய எரிச்சலை ஏற்படுத்தியது. அது என்ன “வாழவழி தெரியதவர்களுக்கு நீ தரும் வரம் மரணம்” என்ன தத்துவமோ. என்ன மதமோ. இது கருணை கொலை வகையில் கூட வராது. சாரி பாலா
Saturday, February 21, 2009
நான் கடவுள்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நான் படம் பார்த்தேன். படத்தில் கதையே இல்லை.மூளை சலவை செய்யக் கூடிய விஷம் படம் முழுவதும்.
வேதம் சொன்னதாக ( ஒரு வேளை கல்கி அவதாரத்தை ) சொல்லிக் கொண்டு கொலை செய்ய ஆரம்பிக்கிரான் இந்த பைத்தியக் காரன், போதையில் இருப்பவன், ( ஒரு வேளை தன்னிலை மறந்த சாமியார் ( பாலா? ஜெய மோகன் ? ) ) ஒருவன் வடக்கில் இருந்த்து வந்தாலே இப்படி ... காட்சியில் பல அஹோரிகள் ( ய்ப்பா..பயமா இருக்கு... எதிர் கால இந்தியா ...)
அப்போ பாலா சார் .... கஞ்சா குடிக்கிரவன் வாழ்லாம் .... உடல் ஊனமுற்ரோர் வாழக் கூடாதா?
என்ன கொடுமை சார்..
" சேது படம் எடுக்கும் போது மூச்சு முட்ட குடித்து விட்டு என்ன எடுப்பது என்று தெரியாமல் ... 100 மொட்டை தலைகள் வேண்டும் என்று கேட்க அதற்கு கந்தசாமி ( தயாரிப்பாளர்) 99 ரெடியா இருக்கு கடைசியா நான் தான் கடைசி நான் வேணும்னா போட்டுக்கவா ? என்று கேட்டது நினைவுக்கு வருது..."
Post a Comment