Monday, April 13, 2009

காங்கிரஸ் க்கு ஓட்டு போட விரும்பாத திமுகவினர் என்ன செய்ய

எனது நண்பர் டாக்டர் கலைஞரின் ஏன் திமுகவின் கண்முடித்தனமான பற்று உள்ளவர். ஆனால் இலங்கை பிரச்சனையில் திமுகவின் , கலைஞரின் செயல் பாட்டில் நெறைய அதிருப்தியை வந்து விட்டது . ஆனால் பொது இடத்தில் விட்டு கொடுக்காமல் பேசினாலும் , நண்பர்களின் உள்வட்டத்தில் பேசும் போது ரொம்ப வருத்தப்பட்டு பேசுவார். சிமானை கைது செய்தது மற்றும் சில விசயங்களில் திமுகவின் மீது கோபம் உண்டு. ஆனால் ஆட்சியினை காப்பாற்ற தலைவருக்கு வேறு வழி இல்லை என்று சமாதானம் சொல்லி கொள்வார். ஆனால் உயிரே போனாலும் காங்கிரஸ் க்கு வாக்கு அளிக்க மாட்டேன் என்றார்.துர் அதிர்ஷ்டமாக அவர் வசிக்கும் தொகுதியில் திமுக போட்டியிட வில்லை , என்ன செய்வது . என்று தலை பிய்த்து கொண்டு இருக்கிறார் ஓட்டு போடாமல் இருந்தால் அந்தம்மாவின் கூட்டணிக்கு சாதகமா போய் விடும் , ஓட்டு மற்ற கட்சிக்கு போட்டாலும் அந்த அம்மாவுக்கு சாதகம் தான். இந்த நிலையில் நிறைய பேருக்கு இருக்கும் . நீங்கள் என்ன செய்ய போகுறீர்கள்

Thursday, April 9, 2009

அவர்களோடு எங்களையும்

மரணமடைந்த தாயிடம்
பால் அருந்தும் குழந்தை
கருவிலேயே குண்டுசிதறல்களில்
கொள்ளப்படும் மனித கருக்கள்

இறந்தவர்க்கு இரங்க
நேரமில்லை
காயம்பட்டவரின் உயிர்
காக்க அவசரமாய் அகற்றப்படும்
உடல்கள்

குழியில் வைக்கப்பட்ட
பிணத்தின் மீது
மண் எடுத்து போட
தெம்பிலாத கைகள்

தொடர் பட்டினியால்
வற்றி போன மார்புகள்
பால்பவுடர்க்கு
அல்லாடும் தமிழ்த்தாய்கள்

தள்ளு வண்டி கடைகள் போல்
அடிக்கடி இடம் மாறும்
மருத்துவமனைகள்
பாதுகாப்பு பகுதிகள்

நச்சு வாய்வு செலுத்தி
மயக்கதில்லேயே சுட்டு
கொல்லப்பட்ட தமிழ் பிண வரிசைகள்

இதையெல்லாம்
பார்த்தும் கேட்டும்
மண் மாதிரி தினசரி வாழ்வை
எத்தனை நாட்கள்
நடை பிணமாய் நடத்துவது
அவர்களோடு எங்களையும்
o o o o o o o

சோனியாவிற்கு குறியா? தமிழீழ விடுதலைப் புலிகள் மறுப்பு!

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவை தேர்தல் பிரச்சாரத்தின் போது விடுதலைப் புலிகள் தாக்கலாம் என்று இந்தியாவின் உளவுத் துறை வெளியிட்ட எச்சரிக்கை, இந்திய மக்களை திசைதிருப்பும் நடவடிக்கை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கூறியுள்ளது.
இந்திய உளவுத் துறை விடுத்துள்ள அந்த எச்சரிக்கைக்கு மறுப்பு தெரிவித்து சிஎன்என்-ஐபிஎன் எனும் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் பா. நடேசன் மின்னஞ்சல் விடுத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், “தமிழர்களின் அவலத்தையும், அவர்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தையும் மறைக்கவும், திசை திருப்பவும் இப்படிப்பட்ட விஷமத்தனமாக பிரச்சாரம் திட்டமிட்டு செய்யப்படுகிறது.
for additional details ://manimalar.wordpress.com

Wednesday, April 8, 2009

கத்திரிக்காய்குழம்பு

எங்க அப்பா அவசரத்துக்கு செய்யும் கத்திரிக்காய்குழம்பு

 

நல்ல குண்டு கத்தரிக்காய்களை எடுத்து அடுப்பில் சுடவேண்டும். சுடும் பொழுது சில சமயம் கத்திரிக்காய் வெடிக்க கூடும் . பயப்படவேண்டாம். சுட்ட உடன் கத்தரிக்காயின் மேல்  தோலை உரித்துவிடவும் , பின்னர் வெங்காயம் , பச்சை மிளகாய் தேவையான அளவு அரிந்து வைத்து கொள்ளவும் , கொஞ்சம் உப்பு எல்லாவற்றையும் ஒரு சட்டியில் போட்டு கடைந்து எடுத்தால் கத்திரிக்காய் குழம்பு தயார். சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும் . மனைவி ஊரில் இல்லாத நாட்களில் ரொம்ப சவுகரியமாக இருக்கும் இந்த குழம்பு.

Saturday, April 4, 2009

மனசாட்சி



மழை கழுவிவிட்ட தார்சாலை

நடு வெள்ளை கோடாக

மைஇருட்டு மேனியில்

வெள்ளை கோடு போட்ட

வால்ஆட்டி குருவி ஒன்னு

ஒவ்வொரு முறையும்

சீட்டி அடித்து அதனை தொடர்நது

தன்னையே பாராட்டி இறக்கை தட்டும்

மனசாட்சி விரோதமில்லாமல்

நடப்பதாக  என்னை நானே

முதுகில் தட்டி கொள்வது போல

 

மேகம் குடை பிடித்து

ஒளிமழைத்துளி தடுத்து

மப்பும் மநதாரமான காலையில்

மனசாட்சி கேட்டது

தொடர்வண்டி படுக்கை வேண்டி

பணம் கொடுத்தது என்ன நியாயம்

 

மேக ஒட்டையின் ஊடே

புகுந்த ஒளிகற்றை போல

நடப்பு வாழ்க்கையில்

வாங்காமல் இருக்கலாம்

கொடுக்காமல் முடியாது

எதார்த்தம் சொன்னது

 

மேகம் முழுவதும் மூடி

மழை பெய்ய ஆரம்பித்தது

எல்லாருக்கும் பொதுவாக

Thursday, April 2, 2009

திடீரென டயட் இருப்பவரா நீங்கள் ?

அமெரிக்க நாட்டின் ஒலிம்பியா மாகான புனித பீட்டர் மருத்துவ மனையில் கடந்த ஆண்டு நவம்பெர் மாதம் ஒரு பெண் நடக்க முடியாமல் மூச்சு விட கஷ்டப்பட்டு . தலை லேசாக உள்ள நிலையில் வந்து சேர்ந்தார். அவரை விசாரித்த போது, இவ்வாறு உடல் நலம் கெடுவதற்கு முந்தைய முன்று நாட்களாக டயட் இருக்க ஆரம்பித்து உள்ளார். காலையில் 225 கிராம் திராட்சை பழம் காலை சாப்பட்டு முறையினை கடைப்பிடித்து உள்ளார். அது வரை பழங்களை உணவாக அவ்வளவாக உணவில் சேர்த்து கொள்ளாதவர் அவர். மேற்படி நாளில் அவர் உட்கொண்ட கருத்தடை மாத்திரை மற்றும் திடீர் திராட்சை உணவு இரண்டு சேர்ந்து அவரது காலில் இரத்த ஓட்டத்தை தடை செய்து விட்டது . அதனால் அவரால் நடக்க முடியவில்லை. அவருக்கு அடைப்பு நீக்கு வெடிப்பு முறையில் மேலும் stent வைத்து அவரது காலில் உள்ள நரம்பினை விரைவாக்கி கிகிற்சை கொடுத்தனர்.
அவர் மூன்று நாட்கள் சாப்பிட்ட திராட்சை அதிகபடியாக oestrogen சுரந்து அவரின் சமநிலையினை சீர்குலைத்து விட்டது மேலும் திராட்சை oestrogen யை உடைக்கும் என்ச்ய்ம் களின் நடவட்டிக்கை தடுத்து விட்டது.
எனவே திவிர டயட் எதிர்பாரா விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள் http://news.bbc.co.uk/1/hi/health/7978418.stm

பிரபாகரன் மகன் சார்லஸ் காயம்

சார்லஸ் அந்தோனி சண்டையில் கடுமையாக காயமடைந்துள்ளார். புதுக்குடியிருப்பு பகுதியில் இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டையில் சார்லஸ் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
for addl details http://manimalar.wordpress.com