Friday, February 13, 2009

காதலர் தினம்

காதலர் தினம்


பூவிகாதலனை பார்த்துக்கொண்டே
இருக்க வேண்டி
தன்னை தானே சுற்றாத நிலவே

தொட்டபேட்ட சிகரத்தில்
மேகம் வந்து இளம் இருள்
கவ்வியவேளையில்
கையுடன் கை சேர்த்த
கதகதப்பே

ஓடும் பேரூந்து பயணத்தில்
தோள் சாய்ந்து
தூங்கும் என் சொர்க்கமே

பானர்தீர்த்தில் பதுவிசாக
நீர் அருவியாக இறங்கும்
தன் பொருனையே

குற்றாலத்தில்
வேற்று உடம்பில்
ஊசி ஊசியாக
குத்தும் சாரல் மழையே

கடல் மீது கரை கோபம் கொள்ளாது
காற்றின் மீது மரம் கோபம் கொள்ளாது
சாலையின் மீது ஊர்தி கோபம் கொள்ளாது
மழையின் மீது மண் கோபம் கொள்ளாது
என் மீது நீ தொடர் கோபம் கொள்வது நியாமா
வெள்ளை ரோஜா சமாதான கொடியுடன்
உன்னை காண நாளை நான் வருவேன்
ஊடல் தீர்த்து உவகை கொள்ள செய்யடி
என் காதல் பெண்ணே

1 comment:

ஆதவா said...

வெளிப்படையா சொல்லணும்னா, கொஞ்சம் சலிப்பா இருக்குங்க.... ஆனா நல்லா முயற்சி பண்ணா அருமையான கவிதை கிடைக்கும்... அதுக்கு சில வரிகள் ரொம்ப அருமையா இருக்கு.

நிலவு, தன்னைத் தானே சுற்றுமுங்க...

////சிகர மேகத்தில் இளம் இருள் கவ்விய/////

இந்த வரிகள் பிரமாதம்...

ஆனால் ஓவரால்.... :(

Post a Comment