Thursday, February 12, 2009

வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்லமாட்டன்

வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்லமாட்டன் ஒரு திரை படத்தில் இப்படி வசனம் ஓன்று வரும். பழைய திரை படங்களிலும் முக்கண், மாயாண்டி, மாடசாமி எல்லாம் வில்லன்கள் பெயராக வரும். இப்படித்தான், எங்கள் அலுவலகத்தில் விருந்துகளில் சைவமா அசைவமா என குறிபெடுக்கும் போது நான் சைவம் என்ற உடன் சார் நீங்க சைவமா என்று வியப்பு மேலூங்க ஒரு பார்வை பார்க்கப்படும், நான் ஏன் அப்பா! கருப்பா இருந்தால் அசைவம்தானா என்று கிண்டல் செய்வேன். ஏன் இதை சொல்லுகிறேன் என்றால் நேற்று வங்கி பணம் வசூலிக்கும் அலுவலர் எங்கள் தெருவில் எங்க வீட்டையும் எதிர் வீட்டையும் பார்த்து கொண்டே இரண்டு மூன்று தடவை குறுக்கும் நெருக்கும் வண்டியில் சென்று ஒரு வழியாக எங்கள் வீட்டில் நின்று திரு முருகேசன் என்பவர் வீடு இதுதானே என வினவி உள்ளார் . இல்லை அப்படி யாரும் இங்கு இல்லை . என சொல்ல இல்லை மேம் , இந்த கதவு எண்ணில்வீடும் எதிர் வீட்டு கதவு எண்ணில் அலவலகம் இருப்பதாக கூறி பஜாஜ் பல்சர் வண்டி வாங்கி ஒரு தவணை கூட கட்ட வில்லை என்று சொல்லி இருக்கிறார். பிறகு மூளை போட்டு கசக்கினால் ஒரு வருடம் முன் எதிர் வீட்டில் வாடகைக்கு இருந்த ஒரு நபர் பெரிய பந்தா பேர்வழி கார் எல்லாம் வைத்திருந்தார். தீடீர் தீடீரென புது பைக் எல்லாம் வாங்கி பிள்ளைகளை சந்தோஷ படுத்துவர். அவர்தான் என நினைவுக்கு வந்தது. சாதரணமான நடுத்தர குடும்பம் வண்டி வாங்க சென்றால் குடும்ப அட்டை கேட்டு முகவரி விசாரித்து கடனுக்கு வண்டி விற்கும் நிறுவனங்கள் காரில் இருந்து இறங்கும் நபர்கள் என்றால் ஒன்றும் கேட்காமல் வண்டியை விற்று விடுகிறார்கள் .அதான் வெள்ளையாய் இருப்பவன் பொய் சொல்லமாட்டன் என்பது போல் நடக்கிறது. இப்ப எல்லாம் வில்லன்கள் பெயர்கள் ராமச்சந்திர ராஜ் , கேசப், மேத்தா, கோலி, என ஆகிவிட்டது தெரியாமல் இன்னும் காரில் வருபவனை நம்பி கடன் கொடுத்து வசூல் ராஜாக்களை பவனி வரத்செய்துகொண்டு இருப்பவர்களை என்ன சொல்ல.

No comments:

Post a Comment