வானம்
காற்றை கொண்டு
மேகம் குலைத்து
செய்த பொம்மைகளை
உனக்காக வாங்கசென்றேன்
கரடி பொம்மையினை
எடுப்பதற்குள்
யானையாய் மாறியது
காற்றில்
கோபம் கொண்டு
வானத்தின் கன்னத்தில் அறைய
கருத்தது மேகம்
வழிந்தது மழை கண்ணீர்
காற்றும் மழையும்
நின்றதால்
உருகுலையா பொம்மை
வாங்கி
உனக்கு அளிக்க வந்தால்
உடல் பொம்மை
விட்டு விட்டு
எனை தேடி
உன் உயிர் வானுலகில்
என் மகளே
Wednesday, February 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அருமை...
வாழ்த்துக்கள்
Post a Comment