Saturday, February 28, 2009

இன்னொரு சுற்றுக்கு


 

வர வர மனைவிமக்களிடம்

அதிகாரம் வீழ்வது கண்டு

காய் அடிக்கப்பட்ட பன்னியாய்

கோபம் கொழுத்தது சண்டைக்காக

 

எல்லாரையும் விட்டு விட்டு

ஓடிவிட  வேண்டுமென

மன நாய் சங்கிலியை

அறுத்து கொண்டிருக்கிறது

 

சட்டையை போட்டு கோபத்தை

முடி மறைத்ததாலும்

கோபம் திரும்புகிறது

தவறாய் போட்ட பட்டன்மீது

 

வெளியே செல்வது  உசிதமாக

புறாக்கால்கள்  பறக்கின்றன

தெரிந்தவரின் வணக்கங்கள்

தவிர்க்க தலை புதைக்கிறேன்

சாலையில் நெருப்புகோழியாய் 

 

 

எங்கெங்கோ சுற்றியது

மனமாகிய உடலும்

உடலாகிய மனமும்

திருப்பங்களில் வீசிய

தென்றல் தண்மையாக்க

செக்குமாடாய் கால்கள்

வீடு புகுந்தது

இன்னொரு சுற்றுக்கு

 

 

 

 

 

2 comments:

ஆதவா said...

சில வார்த்தைகள்..... சுளிக்க வைக்கின்றன.. கவிதை கொஞ்சம் தட்டவேண்டும்.. கரு நன்றாக இருக்கிறது!!! இன்னும் முயற்சி செய்யுங்கள்

butterfly Surya said...

நல்லாயிருக்கு, எழுத எழுதவே சிறக்கும். வாழ்த்துகள்.

Post a Comment