Sunday, February 15, 2009

சின்ன குற்றங்களுக்கு இனி சிறை இல்லை

சின்ன குற்றங்களுக்கு இனி சிறை இல்லை குற்றவியல் நடை முறை திருத்த சட்டம் 2000 இன் படி , ஏழு ஆண்டு குறைவான தண்டனயினைக்கு குறைவான தண்டனயினை பெறத்தக்க குற்றங்களை செய்பவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வியலாது. மேலும் கைதிகளின் காவலை நீடிக்க அவர்களை வீடியோ கான்பிரன்சிங் மூலம் விசாரணை நடத்தி காவல் நீடிக்க முடியும். மேலும்,கற்பழிப்பு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளில் வாய்தா கிடையாது. இச்சட்ட திருத்தம் மத்ய அரசின் அரசிதழில் வெளியிட பட வேண்டி உள்ளது. வெலியிடபட்ட உடன் நடைமுறைக்கு வரும். இச்சட்ட திருத்தத்தை வழக்குஉரைஞர்கள் எதிர்க்கிறார்கள் . அவர்கள் கூறும் கராணம்:-மேற்படி சட்ட திருத்தம் இரு அவைகளிலும் சரியாக விவாதிக்க படவில்லை
காவலர்களின் கருணைன் கீழ் குற்றம் செய்தவரும் , பாதிக்கபட்டவரும் வந்து விடுவர்கள் ஒரு வாய்தா மட்டும் என்பது அவர்கள் பல வழக்குகளில் வாதிடுவது பாதிக்கும் என வழ்க்குஉரைஞர்கள் சங்க தலைவர் கூறுகிறார் . எனக்கு என்னவோ ஒரு வாய்தா என்பது சரியாக தெரிகிறது. ஆனால் சிறு சிறு குற்றவாளிகள் உடன் சிறை தண்டனை, கிடையாது என்றால் குற்றம் செய்து விட்டு ஓடி விட வாய்ப்பு உள்ளது. சின்ன குற்றத்திற்கு கைது கிடையாது என்றால் வழக்கு உரைஞர்களுக்கு சம்பாத்தியம் பாதிப்பு ஏற்படும் என்றுதான் மேற்படி திருத்தத்தை எதிர்க்கிறார்கள் என்று தோனுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்

No comments:

Post a Comment