Friday, February 27, 2009

பெண்கள் தாயாகவே பிறக்கிறார்கள்

பெண்கள் தாயாகவே பிறக்கிறார்கள்
எங்க வீட்டுக்கு எதிர் வீட்டில் ஒரு பூனை நான்கு குட்டிகள் ஈன்று விட்டு இறந்து விட்டது. நான்கு குட்டிகளும் நல்ல அழகு . இறந்து போன தாய் பூனையினை புதைத்து விட்டு குட்டி பூனைகளை அந்த வீட்டுக்கு அருகில் உள்ள எல்லா பெண்களும் அந்த குட்டிகளை தங்களது பராமரிப்பின் கீழ் கொண்டுவந்தனர் . அழுகின்ற குட்டிகளை பார்த்து அதனை பெரும் மனம் இளகி கவர் பால் ஓன்று உடன் வாங்கி வந்தார்கள் . அப்பொழுது குட்டிக்கு எப்படி புகட்டுவது என்று தெரியாமல் விழித்து பின்பு நிப்பிள் எதாவது இருக்குமா என்று கை குழந்தை வைத்திருக்கும் பெண்ணிடம் கேட்க . இல்லை என்று பதில் வர என்ன செய்வது என்று மீண்டும் முழித்து பின் ஒரு வழியாய் இங்க் பில்லர் ஒன்றின் மூலம் குட்டிகளுக்கு பால் கொடுப்பது என முடிவுக்கு வந்து , ஒரு குட்டிக்கு ஊட்டினர் ஒரு பெண். ஊட்டிய குட்டியை தனியாக வைத்து விட்டு ஒவ்வொரு குட்டிகளுக்கும் பால் புகட்டினார்கள் . அந்த குட்டிகள் கத்த ஆரம்பித்தால் , எல்லா வீட்டு கதவுகளும் திறக்கிறது பால் புகட்ட, அடிக்கடி வேறு போய் குட்டிகள் என்ன செய்கின்றன என பார்வை வேறு. எப்படி இந்த பெண்கள் அனதாரவாக விடப்பட்ட குட்டிகளை தங்கள் பிள்ளைகள் போல் நினைக்கமுடிகிறது. எல்லா பெண்களிடமும் அவர்கள் பெண்ணாக பிறக்கும் பொழுதே தாய்மை எண்ணமும் சேர்ந்தே பிறக்கிறது.எங்க ஊரில் கிராமத்தில் பெண் பிள்ளைகளை “தாய் ” என்று விளிப்பார்கள் . இதனால்தானா.

4 comments:

ரவி said...

எங்க ஊரில் கிராமத்தில் பெண் பிள்ளைகளை “தாய் ” என்று விளிப்பார்கள் . இதனால்தானா.

super !!!!!

சந்தனமுல்லை said...

hmm...சுவாரசியம்!! பையன்களும் சிறு வயதில் அப்படி இருப்பதை பார்த்திருக்கிறேன்..பூனைக்குட்டி மற்றும் நாய்க்குட்டியை பராமரித்துக் கொண்டு!

Anonymous said...

:)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

உலகில் பல ஆண்கள் "தாயுமானவ"ராகவும் பிறக்கிறார்கள். மறுக்கக் கூடாது.
எங்கள் வீட்டில் இந்த நாய்க்குட்டி; பூனைக்குட்டி பராமரிப்பெல்லாம் நானும்;என் தம்பியுமே!!
என் அக்கா,தங்கை...பால் எடுக்கும் போது ,அம்மாவிடம் போட்டுக் கொடுக்கும் பணியைச் செவ்வனே செய்தவர்கள்...
அன்று பெண்பிள்ளையைத் தாயே என அழைப்பது போல்.. ஆண்பிள்ளைகளை அப்பு; ஐயா என்று
அழைத்ததுண்டு. இளமையில் என்னை என் தாயார் "அப்பு" ; அதாவது அவர் தந்தையார் போல் அழைத்து மகிழ்வார்.
இப்போ என் பேத்திமாரை...அவர்கள் தாய்மார்..."என்ர அம்மா - என்ர செல்லம்" என்பதைக் கேட்கிறேன்.

Post a Comment