கிளிநொச்சி மருத்துவமைனை மேல்பகுதியில், பாதுகாப்பான இடங்களுக்கு வந்த தமிழ்மக்களில் குறிப்பிட்ட ஆண்களையும். பெண்களையும் இழுத்து வந்து அடிமையாக வைத்து இருப்பதாகவும் அப் பகுதிகளில் பெண்களின் அலறல் சத்தம் அடிக்கடி கேட்பதாகவும்., முகாம்களுக்கு வரும் ஐநா சபையினரிடம் அம்மக்கள் தமிழில் தங்களது பிள்ளைகளை கானோம. என்று சொல்வதை சிங்கள ராணுவத்தார்கள் ஆங்கிலத்தில் விடுதலைபுலிகள் அவர்கள் பிள்ளைகளை இழுத்து சென்றதாக கூறுவதாகவும் தமிழ்நெட்.காம் தெரிவிக்கிறது.
Saturday, February 28, 2009
பாதுகாப்பான இடங்களுக்கு வந்தவர்கள் அடிமைகளாக
இன்னொரு சுற்றுக்கு
வர வர மனைவிமக்களிடம்
அதிகாரம் வீழ்வது கண்டு
காய் அடிக்கப்பட்ட பன்னியாய்
கோபம் கொழுத்தது சண்டைக்காக
எல்லாரையும் விட்டு விட்டு
ஓடிவிட வேண்டுமென
மன நாய் சங்கிலியை
அறுத்து கொண்டிருக்கிறது
சட்டையை போட்டு கோபத்தை
முடி மறைத்ததாலும்
கோபம் திரும்புகிறது
தவறாய் போட்ட பட்டன்மீது
வெளியே செல்வது உசிதமாக
புறாக்கால்கள் பறக்கின்றன
தெரிந்தவரின் வணக்கங்கள்
தவிர்க்க தலை புதைக்கிறேன்
சாலையில் நெருப்புகோழியாய்
எங்கெங்கோ சுற்றியது
மனமாகிய உடலும்
உடலாகிய மனமும்
திருப்பங்களில் வீசிய
தென்றல் தண்மையாக்க
செக்குமாடாய் கால்கள்
வீடு புகுந்தது
இன்னொரு சுற்றுக்கு
Friday, February 27, 2009
புலிகள் சிங்கள் விமானத்தை சுட்டு தள்ளியாதுபுலிகள் சிங்கள் விமானத்தை சுட்டு தள்ளியாது.
புலிகள் சிங்கள் விமானத்தை சுட்டு தள்ளியாது.
ஸ்ரீலங்கா விமானம் முல்லைத்தீவின் அருகில் இன்று 11.30 மணிக்கு வெடித்து சிதறியது . இதனை மக்கள் எல்லாரும் பார்த்து உள்ளனர், ஆனால் புலிகள் அதிவேக விமானத்தை சுட்டும் தள்ளும் சக்தி இல்லை என்று விற்பன்னர்கள் சொன்னாலும் 12.07.2007 இல் இதே போன்ற விமானத்தை புலிகள் சுட்டுவிமானம் எதிர்ப்பு எறிகணையால் சுட்டு தள்ளியதால் அவசரமாக தரை இறக்க பட்டதை நினைத்து பார்த்தல் இது புலிகளின் வீர தீர செயல் தான். புலிகள் இதை உறுதி படுத்தவிட்டலும். வேல் வெற்றி வேல்
பெண்கள் தாயாகவே பிறக்கிறார்கள்
எங்க வீட்டுக்கு எதிர் வீட்டில் ஒரு பூனை நான்கு குட்டிகள் ஈன்று விட்டு இறந்து விட்டது. நான்கு குட்டிகளும் நல்ல அழகு . இறந்து போன தாய் பூனையினை புதைத்து விட்டு குட்டி பூனைகளை அந்த வீட்டுக்கு அருகில் உள்ள எல்லா பெண்களும் அந்த குட்டிகளை தங்களது பராமரிப்பின் கீழ் கொண்டுவந்தனர் . அழுகின்ற குட்டிகளை பார்த்து அதனை பெரும் மனம் இளகி கவர் பால் ஓன்று உடன் வாங்கி வந்தார்கள் . அப்பொழுது குட்டிக்கு எப்படி புகட்டுவது என்று தெரியாமல் விழித்து பின்பு நிப்பிள் எதாவது இருக்குமா என்று கை குழந்தை வைத்திருக்கும் பெண்ணிடம் கேட்க . இல்லை என்று பதில் வர என்ன செய்வது என்று மீண்டும் முழித்து பின் ஒரு வழியாய் இங்க் பில்லர் ஒன்றின் மூலம் குட்டிகளுக்கு பால் கொடுப்பது என முடிவுக்கு வந்து , ஒரு குட்டிக்கு ஊட்டினர் ஒரு பெண். ஊட்டிய குட்டியை தனியாக வைத்து விட்டு ஒவ்வொரு குட்டிகளுக்கும் பால் புகட்டினார்கள் . அந்த குட்டிகள் கத்த ஆரம்பித்தால் , எல்லா வீட்டு கதவுகளும் திறக்கிறது பால் புகட்ட, அடிக்கடி வேறு போய் குட்டிகள் என்ன செய்கின்றன என பார்வை வேறு. எப்படி இந்த பெண்கள் அனதாரவாக விடப்பட்ட குட்டிகளை தங்கள் பிள்ளைகள் போல் நினைக்கமுடிகிறது. எல்லா பெண்களிடமும் அவர்கள் பெண்ணாக பிறக்கும் பொழுதே தாய்மை எண்ணமும் சேர்ந்தே பிறக்கிறது.எங்க ஊரில் கிராமத்தில் பெண் பிள்ளைகளை “தாய் ” என்று விளிப்பார்கள் . இதனால்தானா.
Thursday, February 26, 2009
உதயன் செய்தி தாள் நிருபர் திரு. நடேசபிள்ளை வித்யா தரன் கைது
உதயன் செய்தி தாள் நிருபர் திரு. நடேசபிள்ளை வித்யா தரன் முதலில் அடையாளம் தெரியாத ஆட்களால் கடத்த பட்டார் என்று ஆறு நாட்கள் முன்பு சொன்ன சிங்கள அரசு இன்று அவர் கைது செய்யப்பட்டதாக அவர் சிறிலங்கன் நிலப்பகுதி விசாரணை துறை யினால் பிடித்து செல்லப்பட்டு விசாரிக்க பட்டு உள்ளார் . வன்னியில் சிங்கள ராணுவம் மக்களை தாக்கியதையும் விடுதலை புலிகள் அமைப்பினரின் பேட்டி கண்டு வெளிஇட்டதாலும் இக்கைது என்றுதெரியவருகிறது
Wednesday, February 25, 2009
என் மகளே
காற்றை கொண்டு
மேகம் குலைத்து
செய்த பொம்மைகளை
உனக்காக வாங்கசென்றேன்
கரடி பொம்மையினை
எடுப்பதற்குள்
யானையாய் மாறியது
காற்றில்
கோபம் கொண்டு
வானத்தின் கன்னத்தில் அறைய
கருத்தது மேகம்
வழிந்தது மழை கண்ணீர்
காற்றும் மழையும்
நின்றதால்
உருகுலையா பொம்மை
வாங்கி
உனக்கு அளிக்க வந்தால்
உடல் பொம்மை
விட்டு விட்டு
எனை தேடி
உன் உயிர் வானுலகில்
என் மகளே
Tuesday, February 24, 2009
வெள்ளநிவாரணம்
“ஆயா ரேசன்கார்டு ஜெராக்ஸ் எடுத்து வை” என்றாள் பக்கத்துவீடடு ராணி
“என்னத்துக்கடி” என்றார் அஞ்சலை ஆயா
‘உனக்கு தெரியாதா 2000 ரூபாய் மழை பெஞ்சதுக்கு கொடுக்காங்க”
‘என்னத்துக்கடி”
“வெள்ள நிவாரண நிதியாம்”
“யாரடி சொன்ன”
“வார்டு மெம்பர் சொன்னார், ரேசன் கார்டு ஜெராக்ஸ் எடுத்து வை”
“நீ எடுக்கும் போது எனக்கும் எடுத்துதாயேன்”
“உன் பேரன் எடுத்துட்டு வாரேன் சொல்லிட்டுங்க நான் போகல”
“ எம்மா முதலெ சொல்லக்கூடாது”
‘மறந்துட்டு ஆயா, உங்க சங்கர்கிட்ட சொல்ல வேண்டியதுதானே”
“அவன் சொன்னத கேட்டுட்டு தான், மறுவேலை பார்ப்பான்
ஆங்………… சொல்லி பார்க்கனு……. அது எங்க கேட்க போது”
“சரி நான் வாரேன் ஆயா”
“சரிம்மா”
“சாந்தி மேடம், அந்த தர்மபுரம் 4 வது வார்டு வெள்ள நிவாரண பெனிபிஸரி லிஸ்ட் தயாரா”என உதவியாளர் ராஜா
“சார் நிறைய பேர் இருக்காங்க இன்னைக்கு முடியுமானு தெரியல” என்றார் தட்டச்சர் சாந்தி
“என்னம்மா சொல்ற 6 மணிக்கு அந்த ஊராட்சிததலைவர் , ஆர்.ஐ யோடு வந்து லிஸட் வாங்க வாரேன் என்று சொல்லி இருக்கார் நீங்க என்னனா இப்படி சொல்றீங்க”
“என்ன சார் செய்றது நாலு பேர் செய்ய வேண்டிய வேலையை நான் மட்டும் செய்யனும்ன லேட்டாதான் ஆகும்”
“உங்கள குறை சொல்லல அம்மா, அவங்க வந்த என்ன சொல்றதுன்னு தான் பார்க்கேன்”
“அவசரப்படுத்தாதீங்க சார் தப்பாயிட்டுன்னு என்னை குறை சொல்ல கூடாது’
“சரிம்மா நாளைக்காவது முடியும்மா”
“நாளைக்குள் முடிச்சிராலாம் சார்”
“நாளைக்கு மதியத்துக்குள் முடிச்சிருனும்”
“சரி சார்”
“நான் அவங்களை நாளைக்கு வரச்சொல்றேன்”
“உறலோ நான் மணியூர் வட்டாட்சிஅலுவலகத்திலிருந்து
உதவியாளர் பேசுறேன் தலைவர் இருக்காறா”
“தலைவர்தான பேசுறேன் சொல்லுங்க சார்”
சார் இன்றைக்கு லிஸ்ட் ரெடி யாகாது போல நாளைக்கு வாங்கிகோங்க”
“என்ன சார் இப்படி சொல்லிட்டிங்க நாளைக்கு கொடுத்த நாங்க என்னைக்கு டோக்கன் கொடுத்து என்னைக்கு பணம் கொடுப்பது”
“சாரி சார் நாளைக்கு வாங்கிகோங்க. எங்க ஆர்.ஐ யிட்ட நான் இன்பார்ம் பண்ணிறேன் சார்.”
“சரி என்ன செய்ய நாளைக்கு சீக்கிரம் கொடுக்க பாருங்க இல்லைனா சாலை மறியல் கிறியல் பண்ணி தொலைக்க போறனுக பின்னே பிரச்சனையாய் போயிடும் அவ்வளவுதான் நான் சொல்ல முடியும்”
“நாளைக்கு கட்டாயம் ரெடியாய்டும்”
“சரி சார்”
“கேட்லெம்மா, நாளைக்கு ரெடி பண்ணிரு இல்லையனு பெரிய பிரச்சனை ஆயிடும்”
“சரி சார்”
“உறலோ நான் தான் பேசுறேன்” என்றார் கயல்
“சொல்லு” என்றார் கயலின் கணவர் சந்திரன்
“ஒன்னுமில்லே வெள்ள நிவாரண நிதிக்கு ரேசன் கார்டு ஜெராக்ஸ் கேட்டார் வார்டு மெம்பர், கொடுக்கவா”
“வேண்டாம் நமக்கு எதுக்கு”
“நம்ம வீட்டை சுத்தி ஏரி தண்ணீர் எப்படி ஒடிச்சு இப்பமும் தேங்கி நீற்கிறது தண்ணீயே வராத ஏரியால உள்ளவங்க எல்லாம வாங்கறாங்க.நம்ம வாங்கினா என்ன “
“வேண்டாம்மா அசிங்கமா…… இருக்கும்”
“நானும் இதை சொன்னேன் அதுக்கு எங்க உங்களை விட பணக்காரங்கள் எல்லாம் வாங்கறாங்க. .நீங்க நம்ம கட்சிகாரங்க வேற, கட்டின வரியை திரும்ப வாங்கற மாதிரி நினைச்சுக்கோங்க என்று வார்டு மெம்பர் சொல்றாறர் என்ன செய்ய”
“வேண்டாம்னு சொன்ன கேட்கமாட்டங்கற உனக்கு இஷ்டம்னா செய்”
“என்னங்க இப்படி சொல்லிட்டிங்க வேண்டாம்னு சொல்லிறவா”
“சரி சரி கொடு, நம்ம வார்டில் உள்ள அரசு பள்ளிகூடம் கட்டுமான வேலை முடியாம கிடக்குல அதை கட்டுவதற்கு டோனஷனாக கொடுத்திறலாம்”
என்று தன் மனைவியிடம் சொல்லிவிட்டு மனதுக்குள் எல்லாருக்கும் வெள்ள நிவாரணநிதி உண்டு என்று சொன்ன அரசாங்கத்தின் மீது சின்னதாக கோபம் வந்தது. சந்திரனுக்கு
“ஆயா எல்லாம் ரெடியா வச்சிருக்கிறயா” என்றார் வார்டு மெம்பர்
“ ஏன்ப்பா கட்டாயம் கிடைக்கும்ல “
“ஆயா உன்ன மாதிரி கஷ்டபடுறவங்களுக்கு கட்டாயம் கிடைக்கும். சரி ரேசன் கார்டு ஜெராக்ஸை கொடு ஞாயிற்று கிழமை காலையில் பஞ்சாயத்து ஆபிஸக்கு வந்துரு”
“சரிப்பா நீ நல்லா இருக்கனும்”
“சரி சரி ஞாயிற்று கிழமை மறந்திறாதே”
“சரிப்பா” என்றாள் மகிழ்ச்சியாக.
ஞாயிற்றுகிழமை தர்மபுரம் ஊராட்சிஅலுவலகம் காலை 5 மணியிலிருந்து களை கட்ட ஆரம்பித்தது. பெண்கள் கூட்டம் ஆண்கள் கூட்டத்தை விட அதிகமாக இருந்தது. அஞ்சலை ஆயா பேரனை கெஞ்சி கூத்தாடி பார்த்தும் வெள்ள நிவாரண பணத்தை வாங்க வரிசையில் வரபோக மாட்டேன் என்று சொல்லி விட்டதால், கஷ்டப்பட்டு வயல் வழியாக நடந்து ஊராட்சி அலுவலகம் வருவதற்குள், அவளுக்கு முன்பாக ஐம்பது பேர் நின்று கொண்டிருந்தார்கள். ஆயா கடைசியாய் நின்றவள் பின் போய் நின்றார்.
“என்ன ஆயா வேறு யாரும் வீட்ல இல்ல நீ எவ்வளவு நேரம் நீப்ப” என வரிசையில் முன்னால் நின்ன பெண் கேட்டாள்
“தறுதலை வரமாட்டனு சொல்லிட்டு”
“யாரு”
“அதான் ஒன்னை பெத்து போட்டுட்டு, போய் சேந்துட்டாள என்மவ, அவ பிள்ளையைத்தான் அதாம்மா என் பேரன்”
“எல்ல பிள்ளைகளும் அப்படிதான் இருக்குக”:
ஆயா நிக்க முடியம்ம நின்ன இடத்திலேயே உட்கார்ந்தார்
பத்து மணிக்கு வாருவாங்க வந்து பணம் கொடுப்பாங்கனு யாரோ சொல்லிட்டு போனார்கள். ஆயா காலையில் கொஞ்சம் கஞ்சி வச்சு குடிச்சுட்டு வந்ததுதான்.நேரமாக நேரமாக கூட்டம் மழைக்கால எறும்பு கூட்ட வரிசை போல் நீண்டு கொண்டே போனது. வெயில் ஏற ஆரம்பித்தும் ஆயாவுக்கு லேச மயக்கம் வருவது போல் இருந்தது. பக்கத்திலிருந்த பெண்ணிடம்
“ஏம்மா நான் நிழலிருக்கேன் ஆபிஸர்மார்கள் வந்த கூப்பிடும்மா”
ஆயாவின் நிலமை பார்த்து அந்த பெண்ணும்
“சரி ஆயா கண்ணுக்கு எதிரே நிழலில் உட்காரு அப்பதான கூப்பிட வசதியாய் இருக்கும்”
ஆயா நிழலில் உட்கார்நதாலும் மீண்டும் கூட்டத்தில் போய் சேரும் பொழுது யாரும் தன்னை இடையில் நுழைஞ்சுட்டுனு திட்ட கூடாதே எனும் சின்ன பயத்துடன் ஆபிஸர் வருகிறாரா என வழியையும், கூட்டத்தில் அவள் நின்ற இடத்தையும், சொல்லிட்டு வந்த பெண்ணின் முகத்தையும் உத்தேசமாக பார்த்து சிரித்தாள் . ஆபிஸர் வருகிற மாதிரி தெரியல. ஆயா லேசாக சாய்ந்து கண் அயர்நதாள் . ஏதாவது சத்தம் கேட்டால் அரை குறையாக கண்ணை திறந்து பார்த்து விட்டு தூஙகுவதும் விழிப்பதுமாக இருந்தாள்.யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு ஆயா திடுக்கிட்டு எழுந்து பார்த்தாள் . கூட்டம் அலை மோதி கொண்டு இருந்தது .ஆயா தான் நின்ற இடம் தேடி வரிசை பக்கம் சென்றாள். நின்ற இடம் தெரியாமலும், சொல்லி வந்த பெண்ணும் தெரியாமலும் முழித்தாள். அதற்குள் கூட்டத்தினர், ஆயா ஊடே நுழைவதாக சிலர் சத்தம் போட்டனர். ஆயா ‘நான் முதலிலே வரிசையில் தான் நின்னேன் மயக்கமாக இருந்ததால் நிழலில் நின்னதாக கூறியது’ கூட்டம் போட்ட சத்தத்தில் ஆயாவுககே கேட்கவில்லை. அதற்குள் ஆயா சொல்லி விட்டு வந்த பெண் ஆயாவை அழைத்து தன் பக்கம் நிப்பாட்டி கொண்டு கூட்டத்துக்கு ஆயா முதலில் வந்து நின்னதை சொல்லி விளக்கமளித்தாள் .கூட்டம் லேசான சலசலப்புடன் முணுமுணுத்தது. எல்லாரும் இப்படி சொல்லிட்டு ஏமாத்தறாங்க என சிலர் சததமாக காதுபட பேசினார்கள். நிவாரணநிதி கொடுக்கும் ஆபிஸர்கள் வந்து விட்டதாக யாரோ சொல்ல கூட்டம் நெருக்க ஆரம்பித்தது. ஐந்து ஐந்து பேராக உள்ளே விட்டு பணம் கொடுக்க ஆரம்பித்தார்கள். ஆயா பக்கத்தில் இருந்த பெண்ணிடம் தண்ணீர் வாங்கி குடித்தாள். இப்ப ஆயாவுக்கு கொஞ்ச பரவாயில்லை போல் இருந்தது. இன்னும் பத்து பேர் போன ஆயாவின் முறை வந்து விடும் ஆயா ஆவலுடன் அந்த பணம் கொடுக்கும் வாசலை நெருங்குவதை ஏதோ வைகுண்ட ஏகாதேசிக்கு சொர்க்கவாசல் திறப்பு போல் ஆவலுடன் பார்த்தாள். இன்னும் அஞ்சு பேர்தான், பணம் வாங்கி செல்பவர்களிடம் என்னவெல்லாம் கேட்கிறார்கள் என விசாரித்தாள்.
“ஒன்னுமில்ல ஆயா ரேசன் கார்டு வாங்கி பார்த்து, சீல் போட்டு கையெழுத்து வாங்கிட்டு பணம் கொடுக்கறாங்க’
ஆயாவிற்கு கைநாட்டு போட மை வச்சிறாப்பாங்களா என அந்த பெண்ணிடம் கேட்பதற்கு முன் வெளியெ வந்த பெண் போய்விட்டாள. கைநாட்டு மை வச்சிறாப்பாங்களா எனும் பயம் வேறு வந்துவிட பக்கத்திலிருந்த பெண்ணிடம் விசாரித்தாள்
“மை வைச்சிருப்பாங்களா நான் கைநாட்டு அதான்”
“ ஆயா தொண தொணக்காத மை வச்சிறுப்பாங்க கவலைபடாதே” என்றாள் முன்னால் நின்ற பெண்
ஆயாவும் நான்கு பெண்களும் உளளே சென்றார்கள்.
ஆயா நான்காவதாக இருந்தார். ஆயாவிற்கு முன நின்ற பெண்கள் பணம் வாங்கி சென்றார்கள் .ஆயாவின் முறை வந்ததது. ஆயாவுக்கு லேசாக சந்தோஷம் முகத்தில் வந்து சென்றாலும், சின்ன பதட்டமும் ஏற்பட்டது.
“ஆயா உன் கார்டை கொடு” என்றார் ஒரு அலுவலர்
“எனனதுப்பா”
“ரேசன் கார்டைகொடு ஆயா”
“இந்தப்பா”
கார்டை வாங்கியவர் தன்னிடம் உள்ள லிஸ்ட்டில் உள்ள
பெயர்கள் கார்டு எண்கள் ஆகியவற்றில் ஆயாவின் கார்டு நம்பர் பெயா ஆகியவற்றை சரிபார்த்தார்.ஆயாவிற்கு எப்ப முடிப்பார் எப்ப பணம் கொடுப்பார்கள் என பதட்டம் ஏற்பட்டது. மனதுக்குள் தன் பேரனை வைதாள். இறந்து போன தன் மகளையும் வைதாள். கார்டை சரி பார்த்தவன் எழுந்து போய் பணம் கொடுப்பவனிடம் ஏதோ கேட்டான். ஆயா என்ன இழவு . ‘என்னத்தை போய் கேட்கிறான் இவன். பணம் கொடுத்தால் போதும்’ என மனதில நினைத்து கொண்டாள்.கார்டை சரி பார்ப்பவன் . அவன் இடத்தில் வந்து அமர்ந்து மீண்டும் ஒரு தடவை ஆயாவின் ரேசன் கார்டை லிஸ்டுடன் சரி பார்த்தான்.
ஆயாவிற்கு என்ன இது, என சின்ன பயம் மனதில வர
“என் கார்டுதான்.. ப்பா . என்னால நிக்க முடியல.” என்றாள்
“இல்ல ஆயா . கார்டு நம்பர் சரியில்ல அதான்”
“என்னப்பா சொல்ற “
“ஆயா, உன் கார்டு நம்பரும் லிஸ்ட்டில் இருக்கும் நம்பரும் ஒரே மாதிரி இல்ல, அதானால…………..”
“அதானல……….. என்னப்பா”
அவன் தயங்கி தயங்கி “ஆயா உனக்கு பணம் கொடுக்க முடியாது “
ஆயாவுக்கு தலை சுற்றி மயக்கமே வந்து அப்படியே சரிந்து கீழே உட்கார்ந்து விட்டாள். அலுவலர்கள் போலீஸ்காரரை அழைத்து ஆயாவை வெளியே கொண்டு விடுமாறு கூறினார்கள்.
அதற்குள் வெளியே ஆயா மயக்கம் அடைந்த விஷயம் கேள்விபட்டு வார்டு மெம்பர் உள்ளே வந்து அலுவலரிடம்
“ஏன் சார் ஆயா கார்டு நம்பரை நான்தான் எழுதி கொடுத்தேன்.”
என்று கூறினார்
“சார் நம்பர் சரியாகத்தான் இருக்கு, கார்டில் ‘G” இருக்கு லிஸ்ட்டில் ‘G” க்கு பதிலாக ‘W” என டைப அடிச்சிருக்கு. அதனால………..” என இழுத்தார்
வார்டு மெம்பர் லிஸ்டை கையில் வாங்கி தான் கொடுத்த லிஸ்ட் நகலுடன் சரிபார்த்தார். அலுவலர் சொன்ன படி G” க்கு பதிலா லிஸ்ட்டில் ‘W” என அடிச்சிருந்தது..
“ஏன் சார் எழுத்துதானே மாறியிருக்கு, கொடுங்க. எனக்கு தெரிஞ்சவங்கதான்”.
“சாரி சார், எங்களால் ஒன்றும் செய்ய முடியாது”.
வார்டு மெம்பர் ஆர்.ஐ யிடம் சென்று முறையிட்டார். ஆர்.ஐயும் தன்னால் ஒன்றும் செய்யவியலாது என தெரிவித்து விடவே, வார்டு மெம்பர் ஊராட்சி தலைவரை அழைத்து வந்து அலுவலர்களிடம் பேசி பார்த்தார்..
“சார் எங்களால் ஒன்றும் செய்யவியலாது. தாசில்தார் நினைத்தால் கூட செய்யமுடியுமா” என தெரியாது என அலுவலர்கள் கைவிரித்தனர்.
ஆயா அதற்குள் மயக்கம் தெளிந்து அழ ஆரம்பித்து விட ஆயாவை சுற்றி கொஞ்ச கூட்டம் . உச் கொட்டி வருத்தம் அடைந்தது. முடிந்த அளவு முயற்சி செய்தும் ஒன்றும் செய்யவியலாது. ஆயாவின் முகத்தில முழிக்க கஷ்டபட்டு
கொண்டு ஆயாவின் அருகே வந்த வார்டு மெம்பர்
“வா ஆயா போகலாம், வீட்டில் கொண்டு விடுகிறேன்”
ஏன் தனக்கு பணம் கிடைக்கவில்லை என்பது தெரியாமலும், இனி கிடைக்குமா என்பது தெரியாமலும், வார்டு மெம்பர் வாங்கி தருவர் என்ற அரை குறை நம்பிக்கையுடன் ஆயா வார்டு மெம்பர் வண்டியில் கண்ணீரை சேலையால் துடைத்து கொண்டு ஏறி அமர்ந்தாள்
கொசு என கேவலமாக நினைக்காதீர்கள்
உடனே மலேரியா டயேரியா காலராவை நினைக்காதீர்கள் . அல்லது ஒரு அடியில் செத்துபோகும் கொசு என்ன பெரிய இதா என்றுதானே நினைக்கிறீர்கள் .ரஷியாவின் விண்வெளி வீரர்கள் ஒரு கொசுவை அனைத்துஉலக விண்வெளி ஆய்வு கலத்திற்கு எடுத்து சென்று அக் கொசுவை மேற்படி கலத்திற்கு வெளியே விண்வெளியில் வைத்து விட்டு ஆய்வு செய்தனர். அந்த கொசு சுமார் 18 மாதங்கள் உயிருடன் இருந்தது , மேலும் சுமார் 140 டிகிரி இலிர்ந்து 60 டிகிரி வெப்பத்தையும் தங்கி உயிர் வாழ்ந்தது. கல்த்திருக்கு கொண்டு வந்த போது கால்களை அசைக்கும் சக்தியுடன் இருந்தது. ஆ ...... ஊ........ naa உண்ணாநிலை என்பவர்கள் மேற்படி கொசுக்கு
times of india 22/2/09
Saturday, February 21, 2009
நான் கடவுள்
இன்று தான் பார்ததேன் .திரையரங்கில் பார்க்க வேண்டுமென்று முடிவெடுத்தால் இவ்வளவு நாள் ஆகிவிட்டது. தாம்பரத்தில் கூட்டம் அதிகம் இல்லை. நெறைய பெயர் விமர்சனம் எழுதி விட்டார்கள். கதை தமிழ்மக்களுக்கு மாறுபட்ட புலத்தில் ஆரம்பமாகிறது. அகம் பிரம்மாஸி என்பதை எவ்வளவு பேர் புரிந்து கொள்வார்கள் அத்வைதம் தைவதம் துவைதம் போன்ற பெரிய வார்த்தைகள் தமிழனுக்கு தெரியாது. எந்த கடவுள் என்றாலும் அவனுக்கு பிடித்த ஸ்டைலில் கும்பிட்டுவிட்டு போயிட்டே இருப்பான். இந்த படம் பார்க்கும் பொழுது ஸலம்டாக் மில்லினர் படம் நினைவுக்கு வந்தது. அதிலும் கொடுமையாக குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்து பிழைக்கும் கும்பல் வரும். இதிலும் அதை விட ரொம்ப கொடுமையாக மனதில் இப்படி ஒரு இடம் இருக்கிறதா எனும் எண்ணத்தை மனதில் கொண்டுவந்த பாலா பெரிய வெற்றி பெறுகிறார். ஆரியா பயம் காட்டுகிறார். உழைத்தது வீண் போகவில்லை. மனதில் பிச்சை எடுக்கும் கூட்டம் அதிகமாக பாதித்து விட்டது. நான் எப்பமும் பிச்சை போடுவதை விரும்புவதில்லை.இந்த படம் பார்த்த பிறகு பிச்சை எடுப்பவர்களுக்கு காசு போடாமல் சாப்பிட ஏதாவது வாங்கி கொடுக்கலாம் என முடிவெடுக்க வைத்து விட்டது. பூஜா நன்றாக நடித்து உள்ளார். சிறந்த நடிகை பட்டம் வாங்குவார் பொதுவாக அனைவரும் நன்றாக நடித்து உள்ளனர். அவ்வளவு கஷ்டத்தில் பிச்சைகாரர்கள் தங்களுக்குள் மகிழ்ச்சியாக இருப்பது கொஞ்சம் மனம் நிறைவாக உள்ளது. அந்த பொயவரிடமிருந்து குழந்தையை பிடிங்கி விட்டு சென்ற பின்பு ஆறுதல் சொல்ல வருபவரிடம் கடவுள் பற்றி அந்த பெரியவர் சொல்லும் வசனம் ஜெயமோகன் சூப்பர். . கட்டாயம் இந்த படம் சிறந்த படம் பட்டம் வாங்கும். ஆனால் அந்த கடைசி காட்சி என்னை அறியாமல் பாலா மீது பெரிய எரிச்சலை ஏற்படுத்தியது. அது என்ன “வாழவழி தெரியதவர்களுக்கு நீ தரும் வரம் மரணம்” என்ன தத்துவமோ. என்ன மதமோ. இது கருணை கொலை வகையில் கூட வராது. சாரி பாலா
ஒபாமா ஜிஸஸைவிட பெரியவர்
அமெரிக்காவில் நடந்த வாக்கெடுப்பில் ஒபாமா முதல் இடத்திலும் ஜிஸிஸ் இரணடாவது இடத்திலும். மார்டின் லூதர்கிங் முன்றாம் இடத்திலும் மதர் தெரசா ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.
Thursday, February 19, 2009
வக்கீல் போலீஸ் மோதல் சர்வே விபரம் —-கீற்று
ஈழ ஆதரவுப் போராட்டத்தை ஒடுக்கும் முயற்சி (15) 75%பார்ப்பனர்களின் ஊதுகுழலாக திமுக அரசு (2) 10%சீருடை குண்டர்களாக போலீசார் மாறியிருப்பதால் (3)
வீட்டு சொந்தக்காரர்கள் நடு தெருவுக்கு வந்து விட்ட பாவம்
டெல்லியில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் லட்ச கணக்கில் பணம் கொடுத்து சொந்தமாக வீடு வாங்கி பல ஆண்டுகள் சொந்தவீடில் வாழ்ந்த வீட்டு சொந்தக்காரர்கள் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அவர்கள் வீட்டை விட்டு காலி செய்ய வேண்டிய துயர சம்பவம் ஏற்பட்டது .ஏனெனில் அந்த அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிய கட்டடகாரர் அவர் கார்ப்பரேஷன் வங்கியில் மேற்படி கட்டடம் கட்ட வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் ஓடி விட்டார் .அவர் மீது வங்கி தொடர்ந்த வழக்கில் வங்கி மேற்படி குடிஇருப்பை தன் வாசம் எடுத்து கொண்டு ஏலத்தில் விட்டு அவர்களுக்கு வர வேண்டிய தொகைனை வசூலித்து கொள்ளலாம் என தீர்ப்பு அளித்தது . அதன் காரணமாக அடுக்குமாடி சொந்த குடிருப்பில் குடிஇர்ந்தோர் உடன் தங்களது சொந்த வீட்டை விட்டு வெளியே தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
Wednesday, February 18, 2009
பாக், இந்தியாவிற்கு கடன் பட்டுஉள்ளது. கலெக்ஷன் ஏஜென்ட் யார் ?
இந்தியா பாகிஸ்தான் என் இரண்டு நாடுகள் உதயம் ஆகும் போது. ஏற்பட்ட சில செலவுகள் லில் பாகிஸ்தானின்பங்கை பின்னர் தருகிறேன் என பாக தெரிவிக்க இந்தியா அந்த செலவுகளை செய்தது. அவ்வாறு செலவு செய்த தொகை. ரூ. 300 கோடி யாகும். சுமார் 60 ஆண்டுகள் ஆகிவிட்ட போதும் , மேற்படி தொகையினை பாக திருப்பி தரவில்லை. இது பற்றி கண்டு கொள்ளவே இல்லை. இத்தொகை க்கும் வட்டி ஆண்டுக்கு 3 % மாகும் . எத்தனை சதவிகிதம் என்றால் என்ன திரும்ப தர எண்ணம் இருந்தால் தானே. கொடுத்தவனே கவலைபடாமல் இருக்கான் உனக்கு என்ன என்கிறீர்களா .நம்ம ஒவோருதருக்கும் குறைந்த பட்சம் ரூ 3 ஆவது கிடைக்கும். அடுத்த நாடுன்னா கவலையில்லை, நம்மனா கலக்ஷன் ஏஜென்ட் வீட்டு வாசலில் வந்து நிற்பான் .
Tuesday, February 17, 2009
போரை நிறுத்த தயார் புலிகள்
தாய்பால் கொடுப்பது குழந்தையின் உயிர்க்கு ஆபத்து
பிரித்தானியா ,மற்றும் அயர்லாந்து நாட்டில் நீர்சத்து குறைந்து( dehydrated) புதிதாக பிறந்த குழந்தைகளை மருத்துவமனியில் சேர்த்து உள்ளனர், hypernatraemic dehydration அரிதானது என்றாலும் உயிரை குடிக்ககூடியது .பிள்ளைகளுக்கு தாய் போதிய அளவு பால் கொடுக்காவிட்டாலும் , பிள்ளைகள் தாய் பாலை சரியா குடிக்க தெரியாவிட்டாலும் இந்த hypernatraemic dehydration ஏற்படும் .பிள்ளைகளின் இரத்தத்தில் சோடியம் அளவு விரைவாக குறைகிறது. இதற்க்கு கிகிற்சை எடுக்காவிட்டால் seizures, gangrene, brain damage - and in the worst cases, death. பிள்ளையின் நலம் முளை பாதிக்கப்படும். போதிய அளவு தாய் பால் பிள்ளை குடிக்கவில்லை எனில் தாய் பால் புகட்டுவதை நிறுத்தல் நலம்.http://news.bbc.co.uk/2/hi/health/7867686.stm
தாய்பால் கொடுப்பது குழந்தையின் உயிர்க்கு ஆபத்து
பிரித்தானியா ,மற்றும் அயர்லாந்து நாட்டில் நீர்சத்து குறைந்து( dehydrated) புதிதாக பிறந்த குழந்தைகளை மருத்துவமனியில் சேர்த்து உள்ளனர், hypernatraemic dehydration அரிதானது என்றாலும் உயிரை குடிக்ககூடியது .பிள்ளைகளுக்கு தாய் போதிய அளவு பால் கொடுக்காவிட்டாலும் , பிள்ளைகள் தாய் பாலை சரியா குடிக்க தெரியாவிட்டாலும் இந்த hypernatraemic dehydration ஏற்படும் .பிள்ளைகளின் இரத்தத்தில் சோடியம் அளவு விரைவாக குறைகிறது. இதற்க்கு கிகிற்சை எடுக்காவிட்டால் seizures, gangrene, brain damage - and in the worst cases, death. பிள்ளையின் நலம் முளை பாதிக்கப்படும். போதிய அளவு தாய் பால் பிள்ளை குடிக்கவில்லை எனில் தாய் பால் புகட்டுவதை நிறுத்தல் நலம்.http://news.bbc.co.uk/2/hi/health/7867686.stm
Monday, February 16, 2009
வெளிச்சம் மட்டும் வாழ்க்கை இல்லை
மழைத்துளிகள் கூரையின் விளிம்பில்
முத்துக்களாய் கோர்த்து நிற்கின்றன
மழை அடித்து காற்று தூயிமைஆயிற்று
தெரு வெளிச்சம் தூக்கலாக இருந்தது
தூரத்தில் லெவல் கிராசிங்மூடும் ஒலி தெளிவாய் கேட்டது
முன் இரவு அமைதியாய் அரைஇறுதி கணக்கு பார்க்க தோன்றியது
மனவான நீலத்தில்இளம் இருள் கவ்வியது
மறதியாய் அசையா வெண் மேகங்கள்
நற்செயல்களாய் நட்சத்திரங்கள்
துர்செயல்களாய் இருள்கவ்விய கீழ்வானம்
வெளிச்சம் மட்டும் வாழ்க்கை இல்லை
அதிசியம் இரண்டு துருவங்களிலும் ஒரேமாதிரியான உயிரினங்கள்
Sunday, February 15, 2009
சின்ன குற்றங்களுக்கு இனி சிறை இல்லை
காவலர்களின் கருணைன் கீழ் குற்றம் செய்தவரும் , பாதிக்கபட்டவரும் வந்து விடுவர்கள் ஒரு வாய்தா மட்டும் என்பது அவர்கள் பல வழக்குகளில் வாதிடுவது பாதிக்கும் என வழ்க்குஉரைஞர்கள் சங்க தலைவர் கூறுகிறார் . எனக்கு என்னவோ ஒரு வாய்தா என்பது சரியாக தெரிகிறது. ஆனால் சிறு சிறு குற்றவாளிகள் உடன் சிறை தண்டனை, கிடையாது என்றால் குற்றம் செய்து விட்டு ஓடி விட வாய்ப்பு உள்ளது. சின்ன குற்றத்திற்கு கைது கிடையாது என்றால் வழக்கு உரைஞர்களுக்கு சம்பாத்தியம் பாதிப்பு ஏற்படும் என்றுதான் மேற்படி திருத்தத்தை எதிர்க்கிறார்கள் என்று தோனுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
அமெரிக்க வெளியுறவு துறை திரு ஜான்கேரி தலைமையில் ஒரு குழு
Friday, February 13, 2009
காதலர் தினம்
பூவிகாதலனை பார்த்துக்கொண்டே
இருக்க வேண்டி
தன்னை தானே சுற்றாத நிலவே
தொட்டபேட்ட சிகரத்தில்
மேகம் வந்து இளம் இருள்
கவ்வியவேளையில்
கையுடன் கை சேர்த்த
கதகதப்பே
ஓடும் பேரூந்து பயணத்தில்
தோள் சாய்ந்து
தூங்கும் என் சொர்க்கமே
பானர்தீர்த்தில் பதுவிசாக
நீர் அருவியாக இறங்கும்
தன் பொருனையே
குற்றாலத்தில்
வேற்று உடம்பில்
ஊசி ஊசியாக
குத்தும் சாரல் மழையே
கடல் மீது கரை கோபம் கொள்ளாது
காற்றின் மீது மரம் கோபம் கொள்ளாது
சாலையின் மீது ஊர்தி கோபம் கொள்ளாது
மழையின் மீது மண் கோபம் கொள்ளாது
என் மீது நீ தொடர் கோபம் கொள்வது நியாமா
வெள்ளை ரோஜா சமாதான கொடியுடன்
உன்னை காண நாளை நான் வருவேன்
ஊடல் தீர்த்து உவகை கொள்ள செய்யடி
என் காதல் பெண்ணே