Monday, April 13, 2009
காங்கிரஸ் க்கு ஓட்டு போட விரும்பாத திமுகவினர் என்ன செய்ய
Thursday, April 9, 2009
அவர்களோடு எங்களையும்
பால் அருந்தும் குழந்தை
கருவிலேயே குண்டுசிதறல்களில்
கொள்ளப்படும் மனித கருக்கள்
இறந்தவர்க்கு இரங்க
நேரமில்லை
காயம்பட்டவரின் உயிர்
காக்க அவசரமாய் அகற்றப்படும்
உடல்கள்
குழியில் வைக்கப்பட்ட
பிணத்தின் மீது
மண் எடுத்து போட
தெம்பிலாத கைகள்
தொடர் பட்டினியால்
வற்றி போன மார்புகள்
பால்பவுடர்க்கு
அல்லாடும் தமிழ்த்தாய்கள்
தள்ளு வண்டி கடைகள் போல்
அடிக்கடி இடம் மாறும்
மருத்துவமனைகள்
பாதுகாப்பு பகுதிகள்
நச்சு வாய்வு செலுத்தி
மயக்கதில்லேயே சுட்டு
கொல்லப்பட்ட தமிழ் பிண வரிசைகள்
இதையெல்லாம்
பார்த்தும் கேட்டும்
மண் மாதிரி தினசரி வாழ்வை
எத்தனை நாட்கள்
நடை பிணமாய் நடத்துவது
அவர்களோடு எங்களையும்
o o o o o o o
சோனியாவிற்கு குறியா? தமிழீழ விடுதலைப் புலிகள் மறுப்பு!
இந்திய உளவுத் துறை விடுத்துள்ள அந்த எச்சரிக்கைக்கு மறுப்பு தெரிவித்து சிஎன்என்-ஐபிஎன் எனும் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் பா. நடேசன் மின்னஞ்சல் விடுத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், “தமிழர்களின் அவலத்தையும், அவர்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தையும் மறைக்கவும், திசை திருப்பவும் இப்படிப்பட்ட விஷமத்தனமாக பிரச்சாரம் திட்டமிட்டு செய்யப்படுகிறது.
for additional details ://manimalar.wordpress.com
Wednesday, April 8, 2009
கத்திரிக்காய்குழம்பு
எங்க அப்பா அவசரத்துக்கு செய்யும் கத்திரிக்காய்குழம்பு
நல்ல குண்டு கத்தரிக்காய்களை எடுத்து அடுப்பில் சுடவேண்டும். சுடும் பொழுது சில சமயம் கத்திரிக்காய் வெடிக்க கூடும் . பயப்படவேண்டாம். சுட்ட உடன் கத்தரிக்காயின் மேல் தோலை உரித்துவிடவும் , பின்னர் வெங்காயம் , பச்சை மிளகாய் தேவையான அளவு அரிந்து வைத்து கொள்ளவும் , கொஞ்சம் உப்பு எல்லாவற்றையும் ஒரு சட்டியில் போட்டு கடைந்து எடுத்தால் கத்திரிக்காய் குழம்பு தயார். சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும் . மனைவி ஊரில் இல்லாத நாட்களில் ரொம்ப சவுகரியமாக இருக்கும் இந்த குழம்பு.
Saturday, April 4, 2009
மனசாட்சி

மழை கழுவிவிட்ட தார்சாலை
நடு வெள்ளை கோடாக
மைஇருட்டு மேனியில்
வெள்ளை கோடு போட்ட
வால்ஆட்டி குருவி ஒன்னு
ஒவ்வொரு முறையும்
சீட்டி அடித்து அதனை தொடர்நது
தன்னையே பாராட்டி இறக்கை தட்டும்
மனசாட்சி விரோதமில்லாமல்
நடப்பதாக என்னை நானே
முதுகில் தட்டி கொள்வது போல
மேகம் குடை பிடித்து
ஒளிமழைத்துளி தடுத்து
மப்பும் மநதாரமான காலையில்
மனசாட்சி கேட்டது
தொடர்வண்டி படுக்கை வேண்டி
பணம் கொடுத்தது என்ன நியாயம்
மேக ஒட்டையின் ஊடே
புகுந்த ஒளிகற்றை போல
நடப்பு வாழ்க்கையில்
வாங்காமல் இருக்கலாம்
கொடுக்காமல் முடியாது
எதார்த்தம் சொன்னது
மேகம் முழுவதும் மூடி
மழை பெய்ய ஆரம்பித்தது
எல்லாருக்கும் பொதுவாக
Thursday, April 2, 2009
திடீரென டயட் இருப்பவரா நீங்கள் ?
அவர் மூன்று நாட்கள் சாப்பிட்ட திராட்சை அதிகபடியாக oestrogen சுரந்து அவரின் சமநிலையினை சீர்குலைத்து விட்டது மேலும் திராட்சை oestrogen யை உடைக்கும் என்ச்ய்ம் களின் நடவட்டிக்கை தடுத்து விட்டது.
எனவே திவிர டயட் எதிர்பாரா விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள் http://news.bbc.co.uk/1/hi/health/7978418.stm
பிரபாகரன் மகன் சார்லஸ் காயம்
for addl details http://manimalar.wordpress.com