Friday, March 6, 2009

இருள் கவியும் முன்

இருள் கவியும் முன் மாலை

கார்மேகம்  கரும்போர்வை போற்ற

கடற்கூந்தலில் வெள்ளை பூச்சரமாய்

அலைகள் கரைமோதி பூ தூவும் நேரம்

 

மணல் அளக்கும் உன் கைபற்றி

மணமுடித்தல்  பேச

கரை தொட்டு திரும்பும் அலைகளாய்

என் கையிலிருந்து நழுவியது

விடுபட்டது உன் கை

 

பூஇதழ் உதிரும் சத்தத்திலும் சன்னமாய்

யோசிக்க  நேரம் வேண்டுமென்றாயே

அவ்வமயம் நமது காதல்

மரத்தில் கரையான் ஏறியது

அரித்து முடிக்குமுன்

உன் சிந்தனை புல்லினை நிறுத்தி

கரையான்களை தின்றுவிடு

 

காதலிக்கும் போதும்

உனக்கும் எனக்கும்

குடும்பம் இருந்தது

கல்யாணம் எனறால்

புது உலகத்தில் பிறந்தாற்

போல் பசப்பாதே

முழுவதும் இருள் கவியும் முன்

உள்ளத்தை சொல்லி விடு

 

 

 

 

 

1 comment:

புதியவன் said...

//அவ்வமயம் நமது காதல்

மரத்தில் கரையான் ஏறியது

அரித்து முடிக்குமுன்

உன் சிந்தனை புல்லினை நிறுத்தி

கரையான்களை தின்றுவிடு//

கவிதை அருமை...இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்...

Post a Comment